தூய்மைப்படுத்தும் வாரம் (29.02.2024 - 05.03.2024)
2024-02-29 | News
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, அதனுடன் இணைந்த அனைத்து நிறுவனங்களுடன் கைகோர்த்து, அலுவலக வளாகத்தை சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தும் திட்டத்தை 2024 பெப்ரவரி 29 முதல் மார்ச் 05 வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், அடிப்படை ஆக்கத்திறன்மிக்க கருத்துக்களுடன் ஒன்றிணைந்து மீள் சுழற்சிக்கான பொருட்களை சேகரித்து வகைப்படுத்தி, தேவையற்ற பொருட்களை நீக்கும் செயற்பாடுகளும் இந்நிகழ்ச்சியில் உள்ளடங்குகின்றன. பணியிடத்தில் இனிமையான சூழலை உருவாக்கி பயனாளிகளுக்கு திருப்திகரமான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, அனைத்து அதிவேக நெடுஞ்சாலைப் பரிமாற்ற அலுவலகங்கள், அரச அபிவிருத்தி மற்றும் கட்டுமானக் கூட்டுத்தாபனம் மற்றும் அந்தந்த துணை அலுவலகங்களில், அலுவலகங்களின் செயல்திறனை மேம்படுத்தும் எதிர்பார்ப்புடன் இந்த திட்டம் ‘5- S கருத்திட்டத்துடன்’; செயல்படுத்தப்படும்.
அதேசமயம், 2024 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் திகதி மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு உட்பட்ட யக்கஹாபிட்டிய, குருநாகல், தம்பொக்க, நாகலகமுவ மற்றும் மீரிகம ஆகிய இடமாற்றங்களில் அழிந்துவரும் தாவரமான Crudia Zeylanica ஐ நடும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.